×

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் உக்கரம் ஊராட்சியில் ஆலோசனை கூட்டம்

 

சத்தியமங்கலம்: அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் ஊராட்சிக்கு உட்பட்ட உக்கரம், வண்டிபாளையம், மதிப்பானூர், கேத்தம்பாளையம், கக்கரா குட்டை, குப்பன்துறை, சாணார்பாளையம்,மில்மேடு, காளிகுளம் ஆகிய 9 அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் திட்டம் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று உக்கரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு உக்கரம் ஊராட்சி தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசிபி இளங்கோ கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து பேசினார்.கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சம்பத்குமார், சரோஜா செந்தில்குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் உக்கரம் ஊராட்சியில் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Breakfast Program ,Meeting ,Ukkaram Panchayat ,Sathyamangalam ,Dinakaran ,
× RELATED முதலமைச்சரின் காலை உணவு திட்ட மைய...