×

திருப்பாச்சேத்தி அருகே பழமையான அம்மன் சிலை

 

திருப்புவனம்: திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் அருகே சேதமடைந்த நிலையில் பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பாச்சேத்தி வைகை ஆற்று படுகையோரம் அமைந்துள்ள வடக்கு கண்மாயில் தொல்லியல் களஆய்வு குழுவினர் தருமபுரி ஆசிரியர் (ஓய்வு) தமிழ்மகன் ப.இளங்கோ, அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் சந்திரசேகர். தொல்லியல் ஆராய்ச்சி மாணவர்கள் சீனன் இளந்திரையன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பழங்கால உறைகிணறு, ராஜராஜ சோழனின் குமிழிக் கல்வெட்டு, வட்டெழுத்து தான கல்வெட்டு, நடுகற்கள், முதுமக்கள் தாழியின் உடைந்த ஒடுகள் உள்ளிட்ட பழமை வாய்ந்த பொருட்களை கண்டறிந்தனர்.

மேலும் கண்மாய் அருகே உள்ள காராளருடைய அய்யனார் கோயில் அருகே சேதமடைந்த நிலையில் கேட்பாரற்று கிடந்த மிகவும் பழமை வாய்ந்த அம்மன் சிலையை கண்ெடடுத்தனர்.
இந்த சிலை குறித்து ஓய்வு பெற்ற முனைவர் காளைராஜன் கூறுகையில், ‘‘இது மிகவும் பழமையான மீனாட்சி அம்மன் சிலை. ஆய்வுக்கு பின்னரே இந்த சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும். திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

The post திருப்பாச்சேத்தி அருகே பழமையான அம்மன் சிலை appeared first on Dinakaran.

Tags : Tirupachetty ,Tiruppuvanam ,Ayyanar temple ,Tiruppachetty North Kanmai ,Tiruppachetti ,
× RELATED பொறையாறு திருமுடி சாஸ்தா அய்யனார் கோயில் தேரோட்டம்