×

நூறு நாள் வேலை கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை

 

சாயல்குட: சிறைக்குளம் பஞ்சாயத்தில் குடிநீர்,தெருவிளக்கு மற்றும் முறையாக நூறு நாள் வேலை வழங்கக்கோரி கடலாடி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து மத்தியல், கல்லம்பாடல் பெண்கள் கூறும்போது, கடலாடி ஊராட்சி ஒன்றியம், சிறைக்குளம் பஞ்சாயத்தில் மத்தியல், வல்லம்பாடல் ஆகிய கிராமங்கள் உள்ளன. குக்கிராமமாக இங்கு 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பஞ்சாயத்து சார்பாக நடக்கும் நூறு நாள் வேலை திட்டத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறோம்.

எங்களுக்கு இந்த ஏப்ரல் மாதத்தில் முறையாக வேலை வழங்கப்பட வில்லை. நூறுநாள் வேலை முறையாக சுழற்சி முறையில் நடக்கவில்லை. இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மத்தியல், வல்லம்பாடல் கிராமங்களில் குடிநீர் இல்லை. இதனால் டேங்கரில் விற்கப்படும் தண்ணீரை குடம் ஒன்றிற்கு ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதுபோன்று இரவு நேரங்களில் தெருவிளக்கு எரிவது கிடையாது. இதனால் கிராமம் இருளில் மூழ்கி கிடக்கிறது என்றனர்.

The post நூறு நாள் வேலை கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Union ,Chayalkudam ,Kadladadi Union office ,Jailkulam panchayat ,
× RELATED திருத்தணி ஒன்றியத்தில் ரூ.1.34 கோடி...