திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும் கோடைகால இலவச பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2023-2024ம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் கோடைகால இலவச பயிற்சி முகாம் மாணவ, மாணவிகளுக்கு தகுதி வாய்ந்த பயிற்றுநர்களால் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை 15 நாட்கள் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 6.30 வரையிலும் நடைபெற உள்ளது.
இம்முகாமில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கையுந்துப்பந்து, ஹாக்கி (இருபாலருக்கும்) ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி நடைபெறவுள்ளது. முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும். கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மே 1ம் தேதி அன்று காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 7401703504 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post திண்டுக்கல்லில் மே 1 டூ 15 வரை கோடைகால இலவச பயிற்சி முகாம் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் appeared first on Dinakaran.
