×

திருக்கனூரில் காதல் போட்டி தகராறு சிறுவனை தீர்த்துக்கட்ட சதி திட்டம் 6 பேர் கும்பல் கைது-பகீர் தகவல்

திருக்கனூர், ஏப். 28: திருக்கனூரில் காதல் போட்டி தகராறில் சிறுவனை தீர்த்துக்கட்ட சதி திட்டம் போட்ட 6 பேர் கும்பலை கைது செய்து 3 கத்தி, பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி திருக்கனூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க எஸ்ஐ புனிதராஜ் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோரப்பட்டு, தி.மலை ரோட்டில் 8 பேர் கும்பல் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தது. அவர்களை போலீசார் சுற்றிவளைத்தபோது 2 பேர் தப்பிஓடி விட்டனர். மற்றவர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சோதனையில் 3 கத்திகள், நம்பர் பிளேட் இல்லாத பைக் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் 6 பேரையும் திருக்கனூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில், வில்லியனூர், கூடப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (18), கலித்திராம்பட்டு நவீன் (18), ராம்குமார் (20), கார்த்திகேயன் (19), விநாயகம்பட்டு விபூஷ்ணன் (23) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், இக்கும்பல் கொலை சதி திட்டம் தீட்ட ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. 17 வயது சிறுவன், தமிழக பகுதியை சேர்ந்த மாணவியை காதலித்துள்ளான். அச்சிறுமியை மாஜி காதலன் தட்டிக் கேட்டு புதிய காதலனை தீர்த்துக் கட்டிவிடுவேன் என கூறவே இத்தகவலை சிறுவனிடம் மாணவி தெரிவித்து உள்ளார். இதனால் தனது கூட்டாளிகளுடன், அவனை தீர்த்து கட்ட பதுங்கி இருந்தது தெரியவந்தது. சிறுவன் உள்பட 8 பேர் மீதும் 5 பிாிவுகளின்கீழ் வழக்குபதிந்த போலீசார் தப்பிஓடிய இருவரை தவிர்த்து மற்ற 6 பேரையும் கைது செய்தனர். கொலை சதி திட்டத்தை தடுத்து குற்றவாளிகளை கைது செய்த திருக்கனூர் போலீசாரை சீனியர் எஸ்பி நாரா.சைதன்யா பாராட்டினார்.

The post திருக்கனூரில் காதல் போட்டி தகராறு சிறுவனை தீர்த்துக்கட்ட சதி திட்டம் 6 பேர் கும்பல் கைது-பகீர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thirukanur ,Bagheer ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி ஒப்பந்ததாரர்களிடம் லஞ்ச...