×

இலங்கை மாஜி கடற்படை தளபதிக்கு அமெரிக்கா தடை

கொழும்பு: இலங்கை மாஜி கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடாவுக்கு அமெரிக்கா திடீர் தடை விதித்து உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரில் மனித உரிமைகளை மீறி செயல்பட்ட முன்னாள் மூத்த கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடாவுக்கு அமெரிக்கா திடீர் தடை விதித்து உள்ளது.

70 வயதான வசந்த அமெரிக்காவால் தடை செய்யப்படும் இரண்டாவது மூத்த பாதுகாப்பு அதிகாரி ஆவார். இவர் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே 2020ம் ஆண்டில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இதேபோன்ற தடையை அமெரிக்கா விதித்தது.

The post இலங்கை மாஜி கடற்படை தளபதிக்கு அமெரிக்கா தடை appeared first on Dinakaran.

Tags : US ,Sri Lankan Navy ,commander ,Colombo ,United States ,Sri ,Navy Commander ,Vasantha Karannagoda ,LTTE ,Sri Lanka ,Navy ,Dinakaran ,
× RELATED கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்த...