×

நக்சல் தாக்குதலில் வீரமரணம் போலீஸ்காரரின் உடலை சுமந்து சென்ற முதல்வர்

தண்டேவாடா: சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த போலீஸ்காரர் ஒருவரின் உடல் இருந்த சவப்பெட்டியை அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் சுமந்து சென்றார். சட்டீஸ்கர், தண்டேவாடாவில் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டைக்கு சென்றபோது, மாவோயிஸ்ட்டுகள் நடத்திய சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில், மாவட்ட ரிசர்வ் போலீசார் 10 பேர் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதல்வர் பூபேஷ் பாகேலிடம் தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,‘‘ சட்டீஸ்கர் அரசுக்கு வேண்டிய உதவிகள் வழங்கப்படும்’’ என முதல்வரிடம் உறுதி அளித்தார். இந்நிலையில், உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், முதல்வர் பூபேஷ் பாகேல் கலந்து கொண்டார். முதல்வர் பாகேல், வீரரின் உடல் இருந்த சவப்பெட்டியை தன்னுடைய தோளில் தூக்கி சென்றார். இதன் பின்னர் அவர் கூறுகையில்,‘‘ போலீசாரின் தியாகம் வீண் போகாது. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். இந்த சம்பவத்தினால், எங்களுடைய உணர்ச்சி சார்ந்த மனநிலை பாதிக்கப்படாது. தொடர்ந்து நாங்கள் போராடுவோம். இதில் 2 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்’’ என்றார்.

The post நக்சல் தாக்குதலில் வீரமரணம் போலீஸ்காரரின் உடலை சுமந்து சென்ற முதல்வர் appeared first on Dinakaran.

Tags : chief minister ,Naxal attack ,Thandewada ,Bhupesh Bagel ,Maoist ,Chhattisgarh ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...