×

ரூ.55.94 கோடி மதிப்பீட்டில் 537 சாலை பணிகள் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: ரூ.55.94 கோடி மதிப்பீட்டில் 521 உட்புறச் சாலைகள் மற்றும் 16 பேருந்து தட சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் பேருந்து தட சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம், சிங்கார சென்னை 2.0 மற்றும் மாநகராட்சி மூலதன நிதி மற்றும் வெளி ஆதாரத் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில், ரூ.150.91 கோடி மதிப்பீட்டில் 1,658 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.47.42 கோடி மதிப்பீட்டில் 521 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.31.13 கோடி மதிப்பீட்டில் 342 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரூ.72.36 கோடி மதிப்பீட்டில் 795 உட்புறச் சாலைகள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், ரூ.49.32 கோடி மதிப்பீட்டில் 58 பேருந்து தட சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.8.52 கோடி மதிப்பீட்டில் 16 சாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. ரூ.12.79 கோடி மதிப்பீட்டில் 12 சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ரூ.28.01 கோடி மதிப்பீட்டில் 30 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

The post ரூ.55.94 கோடி மதிப்பீட்டில் 537 சாலை பணிகள் நிறைவு: சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...