×

பிரயண்ட் பூங்காவில் 1 கோடி பூக்களை உருவாக்க முயற்சி

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் வரும் மே 2வது வாரம் மலர் கண்காட்சி நடக்க உள்ளது. இதையொட்டி பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூக்கும் வகையில் மலர் நாற்றுக்கள் மூன்று கட்டமாக நடப்பட்டன. தற்போது இந்த செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக மேரி கோல்ட், பாபி, ஸ்டார் ப்ளக்ஸ் உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன. தற்போது காலண்டுலா மலர்களும் பூக்க தொடங்கியுள்ளன. இதனால் பூங்கா பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. மலர்கண்காட்சி துவங்க 2 வாரங்களே உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

The post பிரயண்ட் பூங்காவில் 1 கோடி பூக்களை உருவாக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Bryant Park ,Kodaikanal ,
× RELATED கோடை கொண்டாட்டத்துக்கு பிரையண்ட்...