×

ரூ.908 கோடி மோசடி தொடர்பாக டான்ஜெட்கோ அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை: ரூ.360 கோடி வைப்பு நிதி ஆவணங்கள் சிக்கின

சென்னை: 2011-ல் இருந்து 2016 வரை விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டுவந்த வகையில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ள. மோசடி புகாரின் பேரில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையை தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில், டான்ஜெட்கோ முன்னாள் தலைமை பொறியாளர் பழனியப்பன், அதிகாரி மனோகரன், பொறியாளர்கள் நரசிம்மன், னிவாச சங்கர் ஆகியோர் முறைகேடு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 2011-ல் இருந்து 2016 வரை தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டு வர ரூ.1,267 கோடி செலவிட்டதாக டான்ஜெட்கோவால் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில், நிலக்கரி கொண்டு வந்த வகையில் ரூ.237 கோடி மட்டுமே செலுத்தப்பட்டது அம்பலமானது. நிலக்கரி ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களுக்கு அளித்த ஊதியத்திலும் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் சவுத் இந்தியா கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்டு இருந்தது. சவுத் இந்தியா கார்ப்பரேஷனுடன் செய்த ஒப்பந்தப்படி அந்நிறுவனத்துக்கு டான்ஜெட்கோ ரூ.1,000 கோடிக்கு மேல் கட்டணம் செலுத்தியுள்ளது. புகாருக்கு ஆளான அதிகாரிகள் அதிமுக ஆட்சியில் பதவியில் இருந்ததால் முறைகேடு வழக்குக்கு முட்டுக்கட்டை போட்டனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தீவிரப்படுத்தி மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது. இந்தநிலையில் டான்ஜெட்கோ அதிகாரிகளிடம் நடத்திய சோதனையில் ரூ.360 கோடிக்கு நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்திருப்பதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post ரூ.908 கோடி மோசடி தொடர்பாக டான்ஜெட்கோ அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை: ரூ.360 கோடி வைப்பு நிதி ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.

Tags : Danjetco ,Chennai ,Visakhapatnam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பு...