×

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடல்சார் விளையாட்டுகள்: கனிமொழி எம்பி., தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பொதுமக்களை கவரும் வகையில் கடல்சார் விளையாட்டுகளை கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவ-மாணவிகளுடன் படகில் சவாரி சென்றார். தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. கூடுதலாக பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஹோலி ஐலேன்ட் வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மூலம் பம்பர் சவாரி, பனானா சவாரி, விண்ட்சர்பிங், ஸ்டாண்ட் அப் போர்ட் ஆகிய நான்கு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கான தொடக்க விழாவில் கனிமொழி எம்.பி., பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், குடும்பத்தினருடன் சவாரி செய்யும் படகில் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுடன் கனிமொழி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் சவாரி சென்றனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயசீலி, பவாணி மார்ஷல், வைதேகி, நாகேஸ்வரி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர். மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் கருணா, மணி, ஜோஸ்பர், பிரபாகர், லிங்கராஜா, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி எமல்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சிக்கு நன்றி
கடற்கரைக்கு வந்த முதியவர் ஒருவர் கூறுகையில், முத்துநகர் கடற்கரை உருவாக்கப்பட்ட பின்னர் நான் தினமும் மாலை பொழுது நடைபயிற்சிக்கு வந்துவிட்டு பின்னர் இரவு வரை இங்கு இருந்துவிட்டு செல்வது வழக்கம். தற்போது திமுக ஆட்சி வந்த பிறகு முத்துநகர் கடற்கரையில் பல்வேறு புதிய அம்சங்கள் நிறைந்த விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய விளையாட்டு போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் நல்ல முறையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்திற்கு மாறாக மகிழ்ச்சியுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் வருகின்றனர். இன்று செயல்படுத்தியுள்ள இந்த விளையாட்டு போட்டிகள் மூலம் கூடுதலாக மக்கள் வருவார்கள். இதை நல்ல முறையில் செயல்படுத்தும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். கடற்கரைக்கு வந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கனிமொழி எம்.பி.யுடன் கை குலுக்கி புகைப்படம் எடுத்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடல்சார் விளையாட்டுகள்: கனிமொழி எம்பி., தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Marine Games ,Muthunagar Beach ,Tuticorin ,Kanimozhi ,Thoothukudi ,Kanimozhi MP ,Muthunagar Beach: ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்த...