×

கோடை மழையால் பசுமை திரும்பியது முதுமலை சாலையோரத்தில் மேய்ச்சலுக்கு வரும் யானை, மான் கூட்டம்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

பந்தலூர்: கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதியில் பசுமை கோடைமழையால் பசுமை திரும்பியது. இதனால் சாலையோரத்தில் மேய்ச்சல் தேடி வரும் மான்கள் கூட்டம் வருகிறது. கூடலூர் அருகே முதுமலை, தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உள்ளது.

இதனால் முதுமலை, தெப்பக்காடு வனப்பகுதியில் சாலையோரத்தில் பசுமை திரும்பியது. மேய்ச்சல் தேடி யானை, மான், கடமான்கள் கூட்டம் கூட்டமாக சாலையோரத்திற்கு வருகின்றன.வனவிலங்குகளின் கூட்டத்தை பார்த்து அந்த வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை விட்டு கீழே இறங்கி மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை பார்த்து ரசித்து செல்கின்றனர். ஒருசிலர் ஆபத்தை உணராமல் அத்துமீறி வனப்பகுதிக்கு சென்று தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர். தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் வறட்சி நீங்கி பசுமை திரும்பிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

The post கோடை மழையால் பசுமை திரும்பியது முதுமலை சாலையோரத்தில் மேய்ச்சலுக்கு வரும் யானை, மான் கூட்டம்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Bandalur ,Mutumalai forestland ,Cuddalore ,Mutumalai Roadway ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி...