×

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்காக ரூ.1,134 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 3-ல் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை ரூ.1134 கோடியே 11 லட்சம் மதிப்பில் உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலைய பணிகளுக்கு ஒப்பந்தமானது.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான உயர்மட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு ரூ.1134 கோடியே 11 லட்சம் மதிப்பில் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியாகும். இது சென்னை மெட்ரோ இரயில் திட்டம் இரண்டாம் கட்டத்திற்கான கடைசி உயர்மட்ட வழித்தட ஒப்பந்தம் ஆகும்.

ஒப்பந்தத்தின் நோக்கம் உயர்மட்ட வழித்தடம் (தோராயமாக 10 கிமீ நீளம்) அமைத்தல் மற்றும் 9 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களை அமைப்பதை உள்ளடக்கியது. சோழிங்கநல்லூர் ஏரி-, ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் (சோழிங்கநல்லூர் ஏரி-II), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செம்மஞ்சேரி-I), செம்மஞ்சேரி-II, காந்தி நகர், நாவலூர், சிறுசேரி, சிறுசேரி சிப்காட் -1 மற்றும் சிறுசேரி சிப்காட் -2.

இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் மற்றும் இரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் சார்பாக முதுநிலை துணைப் பொது மேலாளர் சௌத்ரி ரஜ்னீஷ் குமார் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் டி. குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), இணை பொது மேலாளர் கே.பிரதீபன், பொது ஆலோசகர்கள் மற்றும் இரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

The post சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்காக ரூ.1,134 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro Rail Phase ,Route 3 ,Choshinganallur ,Chipgad ,Dinakaran ,
× RELATED நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட...