×

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை: இந்தியர்களை கருத்தில் கொண்டு சட்டம் இயற்றம்

நியூயார்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு இது சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

தீபாவளி பண்டிகை என்பது இந்தியர்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாய் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள இந்தியர்கள் தீபாவளி தினத்தை அந்நாட்டு அரசு சட்ட திட்டங்களின் படி விசேஷமாக கொண்டாடுவார்கள். பெரும்பாலான நாடுகள் இந்தியர்களின் பண்டிகை. களை கொண்டாட அனுமதித்து அவர்களும் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 2002இல் இருந்து ஆண்டு தோறும் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெறுகிறது. 2007ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு தீபாவளி பண்டிகைக்கு அங்கீகாரம் வழங்கியது. ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் தீபாவளி அன்று இந்தியர்களுக்கு வாழ்த்து கூறுவார். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள உத்தா மாகாண மேலவையில் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஒரு சில மாகாணங்களில் ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்கபட்டது. இந்நிலையில் தற்போது பென்சில்வேனியா என்ற மாகாணத்தில் அங்கு வசிக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு தீபாவளி தினத்தன்று பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டமாக நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

The post அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இனி தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை: இந்தியர்களை கருத்தில் கொண்டு சட்டம் இயற்றம் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Pennsylvania Province, USA ,Indians ,New York ,United States ,of Pennsylvania ,Pennsylvania Province of the United States ,Diwali Festival ,
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...