×

அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்காமல் 60,000 லேப்டாப் வீண்: சிஏஜி அறிக்கை என்பது கணக்கு மட்டுமே என்று செங்கோட்டையன் பதில்

ஈரோடு: அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறையில் 60,000 மடி கணினிகள் வீணாகி ரூ.80 கோடி நஷ்டமானதாக சிஏஜி அறிக்கையில் வெளியாகி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புள்ளி விவரங்களை கொண்டு கேள்வி கேட்க கூடாது என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே ஆளுக்குடி ஊராட்சி தூய்மை பணிக்கு வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கெடுத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன்; அரசு பள்ளிகளில் 3% மாணவர்கள் குறைந்ததற்கான காரணம் குறித்து கேட்டபோது இதற்கான புள்ளி விவரம் யாரிடம் இருக்கிறது என்றார்.

தொடர்ந்து அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறையில் 60,000 மாடி கணினிகள் வீணாகி 80,000 கோடி நஷ்டமானதாக சிஏஜி அறிக்கையில் வெளியாகி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது புள்ளி விவரங்கள் வெறும் கணக்குதான் அதனை அடிப்படையாக கொண்டு கேள்வி கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். குளத்தூர் வரை வனச்சரணாலயம் அமைப்பதால் அந்த பகுதியில் வாழுகின்ற மக்களின் நலன் குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது குறித்து எதிர் கட்சித்தலைவர் மூலமாக அரசுக்கு கடிதங்கள் அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.

The post அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்காமல் 60,000 லேப்டாப் வீண்: சிஏஜி அறிக்கை என்பது கணக்கு மட்டுமே என்று செங்கோட்டையன் பதில் appeared first on Dinakaran.

Tags : CAG ,Sengottaiyan ,Erode ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...