×

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய சீன அதிபர்

பீஜிங்: உக்ரைன் மீது ரஷ்யா போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர சீனா மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளது. இதற்காக சமாதான யோசனைகளையும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரஷ்யாவுக்கு சென்றிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், இதுபற்றி பேசியுள்ளார்.

இந்நிலையில், முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, போர் நிறுத்தம் மற்றும் அரசியல் தீர்வை கொண்டுவர மத்தியஸ்தம் செய்வதாக கூறினார். பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வு என்றும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறப்பு தூதரை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத போரினால் யாரும் வெற்றி பெற முடியாது. அணுசக்தி பிரச்னையில், சம்பந்தப்பட்ட நாடுகள் அமைதியாக இருப்பதுடன், நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உண்மையிலேயே தங்கள் சொந்த நாட்டின் எதிர்கால நலன் மற்றும் மனித குலத்தின் நலன்களுக்காக செயல்பட வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையை கூட்டாக கையாள வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

The post உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய சீன அதிபர் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,President Zelansky ,Beijing ,Russia ,China ,Chancellor ,President ,Zelansky ,Dinakaran ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...