×

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது: சென்னை ஐகோர்ட் அதிரடி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. உயிரிழப்பை தடுக்க ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியதில் என்ன தவறு உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயிரிழப்பை தடுக்க ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றியதில் என்ன தவறு உள்ளது என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

நிறுவனங்கள் பணம் சம்பாதித்து குடும்பங்களை சீரழிப்பதால் அந்த குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் என அரசு வாதிட்டது. ஒன்றிய அரசுக்கு இணையவழி சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தகுதி இல்லையே என தமிழக அரசுசார்பில் வாதிடப்பட்டது.

சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், குடும்ப வறுமை ஆகியவற்றை தடுக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. தன்மக்களை காக்கவே சட்டம் இயற்றியுள்ளதாக அரசு கூறுகிறது. தமிழகத்தில் லாட்டரி, குதிரை பந்தயம், ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதை தெரிந்துகொள்ளுங்கள். ரம்மியில் கணவர்கள் பணத்தை வீணடிப்பதாக அவர்களின் மனைவிகள் கண்ணீர் வடிக்கிறார்களே என உயர்நீதிமன்றம் கூறியது.

The post ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது: சென்னை ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Chennai ,Tamil Nadu government ,Chennai iCourt ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...