×

OLX உள்ளிட்ட பயன்படுத்திய பொருட்கள் விற்பனை செய்யும் இணையதள செயலிகள் மூலம் தொடரும் மோசடிகள்

புதுச்சேரி: OLX உள்ளிட்ட பயன்படுத்திய பொருட்கள் விற்பனை செய்யும் இணையதளங்கள் செயலிகள் மூலம் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தற்போது புதுச்சேரியில் ஒன்றிய அரசு ஊழியர்கள் ராணுவ வீரர்கள் என கூறி ஒரு கும்பல் அடுத்தடுத்து பலரிடம் மோசடியை அரங்கேற்றி உள்ளதாக புகார்கள் குவிந்து வருகின்றது. மோசடியில் சிக்காமல் போலீசார் கூறும் அறிவுரைகள்.

பயன்படுத்திய பழைய பொருட்கள் விற்பனை செய்யும் செயல்களில் பதிவு செய்து 1000 கணக்கில் மோசடி செய்து ஏமாற்றியுள்ளதாக 2 மாதங்களில் 14 புகார்கள் பதிவாகியுள்ளதாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பழைய பொருட்களை வாங்க விற்க உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைத்தளங்களன OLX, செகண்ட் ஹாண்ட் மால், முகநூல், ஆகியவற்றில் இணையவழி மோசடிக்காரர்கள் மோசடியை அரங்கேற்றி வருவதாக குறியுள்ளனர்.

மோசடி கும்பல் தங்களை ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப், அல்லது மத்திய அரசு ஊழியராக பணிபுரிவதாக கூறி அறிமுகப்படுத்தி கொள்கின்றனர். தற்போது தனக்கு மாறுதல் வந்துவிட்டதால் அடுத்த வாரம் டெல்லி செல்ல வேண்டும் என்றும் பொருட்களை விற்க இருப்பதாக புகைப்படங்களுடன் விளம்பரங்களை அவரகள் குறிப்பிட்ட செயலிகள் மற்றும் இணையத்தில் பதிவிடுகின்றனர். அதை பார்த்து அதில் உள்ள தொடர்பு எண்களுக்கு பொது மக்கள் தொடர்பு கொண்டால் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருளை 90 ஆயிரம் ரூபாய்க்கு தருவதாக கூறுவார்கள்.

நீண்ட தொலைவு செல்வதால் தங்களால் இந்த பொருட்களை எடுத்து செல்ல முடியாது என்பதால் குறைந்த விலைக்கு விற்பதாக அவர்கள் பொதுமக்கள் நம்பும்படி கூறுவார்கள். இதனை நம்பி மேலும் குறைந்து தருமாறு பொதுமக்கள் பேரம் பேசினால் சிறிது பேரம் பேசி விலையை குரைப்பதுப்போல் குறித்து முன்பணமாக ரூ. 10,000 முதல் ரூ. 20,000 வரை செலுத்துமாறு வாங்கிக்கணக்கை கொடுப்பார்கள், தரமான பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கிறதே என்று ஆசையில் பொதுமக்களும் அவர்கள் கேட்க்கும் பணத்தை செலுத்திவிடுகின்றனர்.

அதன் பிறகு அவர்கள் போனை அணைத்து விட்டு, தலைமறைவாகி விடுகின்றனர். இது போல் 2 மாதத்தில் 14 புகார்கள் வந்துள்ளதாகவும் இது போன்ற குறைந்த விலைகளில் பொருள் கிடைக்கிறது என்று யாராவது விளம்பரம் செய்தல் அதை நம்பி பொதுமக்கள் யாரும் பணத்தை மோசடி நபர்களிடம் செலுத்தி ஏமாறவேண்டும் என்று புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் துறை எச்சரித்துள்ளது.பொருட்களை நேரில் பார்த்து அதன் பிறகு வாங்குமாறும் ஆன்லைனில் உள்ள போட்டோவை மட்டும் பார்த்துவிட்டு பணத்தை கொடுக்கவேண்டும் என்றும் குறியுள்ளனர்.

The post OLX உள்ளிட்ட பயன்படுத்திய பொருட்கள் விற்பனை செய்யும் இணையதள செயலிகள் மூலம் தொடரும் மோசடிகள் appeared first on Dinakaran.

Tags : OLX ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...