×

திருவாரூர் ரயில் மேம்பாலத்தில் முளைத்திருந்த ஆலமர செடிகள் அகற்றம்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவிப்பு

திருவாரூர்: திருவாரூரில் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக ரயில்வே மேம்பாலத்தில் இருந்து வந்த ஆல மரம் செடிகள் அகற்றப்பட்டன. திருவாரூரில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய பேரூந்து நிலையமானது (தற்போது பழைய பேரூந்து நிலையம்) அமைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தஞ்சை, நாகை மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் சாலைகள் மிகவும் குறுகலாவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் இருந்ததன் காரணமாக இந்த வழிதடங்களுக்கு செல்வதற்காக சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பேரூந்து நிலையத்திலிருந்து பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இதில் நாகை மற்றும் திருத்துறைபூண்டி வழிதடங்களை கடப்பதற்கு ரயில்வே தண்டவாளமானது குறுக்கே இருந்நதால் இதற்காக பைபாஸ் சாலையின் இடையே ரயில்வே மேம்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த பாலத்தினை நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் கனரக வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி பல்லாயிரகணக்கான இருசக்கர வாகனங்களும் கடந்து செல்கின்றன. இந்நிலையில் இந்த பாலத்தின் அடியில் செடி, கொடிகள் முளைத்திருப்பதன் காரணமாக பாலத்திற்கு சேதம் ஏற்படும் அபாயம் இருந்து வருவது குறித்தும், இந்த பாலத்தில் ஏதேனும் சேதம் ஏற்ப்பட்டு போக்குவரத்து தடை ஏற்ப்பட்டால் திருவாரூர் பகுதியிலிருந்து நாகை மற்றும் திருத்துறைபூண்டி மார்கத்தில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்படும் அபாயம் மட்டுமின்றி சுற்றுலா தலங்களான சிக்கல், நாகை, நாகூர் மற்றும் வேளாங்கண்ணி போன்ற ஆன்மீக தலங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்களின் வாகனங்கள் செல்லவும் தடை ஏற்படும் அபாயம் இருந்து வந்தது குறித்து கடந்த 19ந் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இந்த பாலத்தின் அடியில் முளைத்திருந்த செடி, கொடிகள் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மூலம் நேற்று முன்தினம் அகற்றப்பட்டுள்ளது.
இதற்கு காரணமாக தினகரன் நாளிதழ் மற்றும் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு பொது மக்களும், வாகன ஓட்டிகளும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

The post திருவாரூர் ரயில் மேம்பாலத்தில் முளைத்திருந்த ஆலமர செடிகள் அகற்றம்: பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Dhinakaran ,Thiruvarur ,Dinakaran ,
× RELATED திருவாரூரில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு..!!