×

வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கம், வெள்ளி பற்கள் விற்பனை: குஜராத்தின் சூரத் நகை வணிகர்களின் நூதன யுக்தி

குஜராத்: தங்கத்தால் ஆன பற்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது வைரத்தால் ஆனா பற்களும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தியாவின் வைரநகரம் என புகழப்படும் குஜராத்தின் சூரத்தில் தான் வைர பற்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தங்கம் அல்லது வெள்ளியை பல் வடிவில் வார்த்து அதன் மீது சிறிய அளவிலான 2000 வைரக்கற்கள் ஒட்டப்பட்டு நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

வைரங்கள் மற்றும் வெள்ளியை வைத்து 16 பற்கள் உள்ள நகைகளை செய்தால் அவை இந்திய மதிப்பில் 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதில் தங்கம் சேர்த்தால் அவை ரூ. 5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறினர். மேலும் சுமார் 40 கிராம் இடையுள்ள இந்த பற்கள் தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட வைர பல்செட் ஒன்றின் விலை ரூ.25 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை எனவும் இவற்றை அணிவதும், கழற்றுவதும் எளிது என்றும் சூரத் நகைக்கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

The post வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கம், வெள்ளி பற்கள் விற்பனை: குஜராத்தின் சூரத் நகை வணிகர்களின் நூதன யுக்தி appeared first on Dinakaran.

Tags : Gujarat ,India ,Diamond ,
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...