×

சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில்துறை நவீன இயந்திர கண்காட்சி: 10,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் அறிமுகம்

சென்னை: வீடுகளை கூட கட்ட கூடிய தானியங்கி ரோபோகளை கொண்ட நவீன இயந்திரங்களின் கண்காட்சி சென்னையில் முதன்முறையாக நடைபெறுகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் 3 நாட்கள் நடைபெறும் தொழில்துறை நவீன தொழில்நுட்ப கருவிகளின் கண்காட்சி நேற்று தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கண்காட்சியில் பார்வையாளர்கள், சிறு,குறு நிறுவனங்களை சார்ந்தவர்கள் தங்களது விவரங்களை பதிவுசெய்துவிட்டு பார்வையிடலாம் என சிட்கோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 153 அரங்குகள் அமைத்து தங்கள் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். ரோபோக்கள் தானியங்கி முறையில் ஒரு பயணத்திற்கு மட்டுமின்றி பல தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் சிறு மற்றும் குறு நிறுவனங்களை சார்ந்தவர்கள் தங்களுக்கு தேவைப்படும் உற்பத்தி பொருட்களை இங்கு கண்ணுற்று பயன்பெறும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

The post சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில்துறை நவீன இயந்திர கண்காட்சி: 10,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Industrial Modern Machinery Exhibition ,Chennai Nandampakam ,CHENNAI ,Chennai… ,Chennai Nandambakkam ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...