×

முறைகேடாக நிலம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரம்: திருவாரூரில் முன்னாள் கோட்டாட்சியர் உள்பட 3 பேர் வீட்டில் சோதனை

திருவாரூர்: திருவாரூர் முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் முத்து மீனாட்சியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு செந்தில் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் முறைகேடாக வேறு ஒருவருக்க பட்டா பெயர் மாற்றம் செய்து பல கோடி ரூபாய் ஆதாயமடைந்ததாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக செந்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் அப்போதைய கோட்டாட்சியர் முத்து மீனாட்சி, வி.ஏ.ஓ துர்கா ராணி, உதவியாளர் கார்த்தி ஆகியோரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் முத்து மீனாட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநராக பணியாற்றி வருகிறார். அதேபோல துர்கா ராணி வி.ஏ.ஓ-ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கோட்டாட்சியர் முத்து மீனாட்சி, வி.ஏ.ஓ துர்கா ராணி, உதவியாளர் கார்த்தி ஆகியோர் வீட்டில் காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி நந்தகோபால் தலைமையில் 12 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்வினால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

The post முறைகேடாக நிலம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரம்: திருவாரூரில் முன்னாள் கோட்டாட்சியர் உள்பட 3 பேர் வீட்டில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Revenue ,Kotatsier ,Pearl Meenadi ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்