×

மயிலாடுதுறை உத்திராபதிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

 

மயிலாடுதுறை, ஏப்.27: மயிலாடுதுறை தாலுகா நல்லதுகுடி வடக்கு தெருவில் அமைந்துள்ள உத்திராபதிஸ்வரர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று நான்கு கால யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக கோமம், தனபூஜை உள்ளிட்ட கோமங்கள் நடைபெற்று பூணாகதி செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாகதி செய்யப்பட்டு புனித நீர் அடங்கிய கடன்கள் புறப்பாடாகி மல்லாரி இசை முழங்க கோவிலின் கும்ப கலசத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து பூஜித்த கடங்கள் நீரானது கலசங்களின் மேல் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு கர்ப்பகிரக மூலவராக அமைந்திருக்கும்  உத்திராபதிஸ்வரருக்கு புனிதநீர் ஊற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post மயிலாடுதுறை உத்திராபதிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Uthirapatiswarar Temple Kumbabhishekam ,Uthirapatiswarar ,Temple ,Jirnotharana ,Ashtabandana Maha Kumbabhishekam ,Churagudi North Street ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...