×

மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் வென்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு

 

தேவதானப்பட்டி, ஏப். 27: திண்டுக்கல்லில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் தேவதானப்பட்டி கல்லூரி பேராசிரியர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவில் பேராசிரியர்களுக்கு கிரிக்கெட் மற்றும் கூடைபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் மாநில அளவில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கூடைபந்தாட்ட போட்டியில் பங்கேற்ற தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள மேரிமாதா கல்லூரி பேராசிரியர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். இரண்டாம் பிடித்த பேராசிரியர்களை கல்லூரி முதல்வர் ஐசக், துணை முதல்வர் ஜோசி பரந்தொட்டு, நிதி நிர்வாக அலுவலர் பிஜோய், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பாராட்டினர்.

The post மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் வென்ற பேராசிரியர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Devadanapatti College ,Dindikulla ,Dinakaran ,
× RELATED கோயில் செயல் அலுவலரை தாக்கியவர் மீது வழக்கு