×

விளம்பர பேனர்களை அகற்ற கோரிக்கை

 

கீழக்கரை, ஏப்.27: கீழக்கரையில் விளம்பர பேனர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விளம்பர போர்டு சாய்ந்து உயிர்பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர். கீழக்கரை முக்கு ரோடு, கிழக்குத் தெரு, சீதக்காதி சாலை,தெற்கு தெரு, வடக்கு தெரு மணல்மேடு ஆகிய பகுதியில் விளம்பர பேனர்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர்கள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர். சீதக்காதி சாலை மற்றும் பேருந்து நிலையம் செல்லும் வளைவிலும் வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மீது விழுந்து உயிர் பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இதனால் நகராட்சி நிர்வாகம் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விளம்பர பேனர்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Keezhakarai ,Keezhakarai.… ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கல்...