×

கல்யாண சூடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

 

ஓசூர், ஏப். 27: ஓசூர் தேர்ப்பேட்டை கல்யாண சூடேஸ்வரர் கோயிலில் இன்று(27ம்தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இன்று காலை 7 மணி முதல் 9 வரை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சந்திரசூடேஸ்வரர் கோயில் அர்ச்சகர் வாச்சீஸ்வரன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், இதில் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேக பணிகளை முன்னாள் எம்எல்ஏவும், கல்யாண சூடேஸ்வரர் கோயில் தேர் கமிட்டி தலைவருமான மனோகரன் தலைமையில், பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பாஜ மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் கோயில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

The post கல்யாண சூடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Kalyana Sudeshwarar Temple Kumbabhishekam ,Kalyana Sudeshwarar Temple ,Hosur Therpet ,
× RELATED இளம்பெண் மாயம் தொழிலாளி மீது புகார்