×

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் மறைவு: வைகோ இரங்கல்

சென்னை: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு: இந்தியாவின் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவரும், சிரோன்மணி அகாலிதள கட்சியின் தலைவருமான பிரகாஷ்சிங் பாதல் மறைந்தார் என்ற செய்தி கேட்டு துக்கமும், அதிர்ச்சியும் அடைந்தேன். முப்பது ஆண்டுகளாக அவரோடு நான் பழகியிருக்கிறேன். பஞ்சாபிலேயே அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்தவர் பாதல். ஒன்றரை ஆண்டுகள் கோயம்புத்தூர் சிறையில் இருந்தார்.

அவர் முதலமைச்சராக இருந்தபோது, 1998 இல் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்தாள் விழாவினை சென்னை கடற்கரையில் மாநாடாக மதிமுக நடத்தியபோது, அதில் பங்கேற்றுச் சிறப்புச் செய்தார். நட்புக்கு இலக்கணமான அவரது மறைவு பஞ்சாப் மாநிலத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பொதுவாழ்வுக்கே பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் பஞ்சாப் மக்களுக்கும், அகாலிதள தலைவர்களுக்கும் என்னுடைய அஞ்சலியை மதிமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

The post பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் மறைவு: வைகோ இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Punjab ,Chief Minister ,Prakashing Padal ,Chennai ,Prakashing Bathal ,Secretary General ,Madimagha ,Former ,Prakashing Badhal ,Vigo ,
× RELATED பஞ்சாப் மாபியாக்களை ஒடுக்க...