டோக்கியோ: நிலவில் நேற்று தரையிறங்க முயன்ற ஜப்பானின் விண்கலமான ஹகுடோ-ஆர் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டு விழுந்து நொறுங்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஜப்பானின் டோக்கியோவை தலைமையிடமாக கொண்ட ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் லேண்டரை உருவாக்கியது.
ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர் நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பப்பட்டது. 4 ½ மாதப் பயணத்துக்குப் பிறகு உலகின் முதல் தனியார் லேண்டர் நேற்று தரையிறங்க இருப்பதாக ஜப்பான் தனியார் விண்வெளி நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், நிலவில் நேற்று தரையிறங்க முயன்ற ஜப்பானின் லூனார் லேண்டர் ஹகுடோ-ஆர் தொடர்பு 6 மணி நேரத்துக்கும் மேலாக துண்டிக்கப்பட்ட நிலையில், அது நிலவில் விழுந்து நொறுங்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஹகுடோ-ஆர் லேண்டர் நிலவில் தரையிறங்கும் சில நொடிகளுக்கு முன் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தங்கள் ஆளில்லா விண்கலத்தை தரையிறக்கி உள்ளன.
The post தரையிறங்க முயன்ற போது நிலவில் மோதி ஜப்பான் விண்கலம் நொறுங்கியது appeared first on Dinakaran.