×

கொரிய தீபகற்பத்துக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா

வாஷிங்டன்: கொரிய தீபகற்பத்துக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வடகொரியா தென்கொரியா நாடுகளிடையேயான நீண்டநாள் மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அண்டை நாடுகள் மீதான வடகொரியாவின் தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கையாக, ‘வாஷிங்டன் பிரகடனம்‘ என்ற கூட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா அதிபர் பைடன், தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

The post கொரிய தீபகற்பத்துக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா appeared first on Dinakaran.

Tags : US ,Korean Peninsula ,Washington ,North Korea ,South Korea ,America ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...