×

சூடானில் இருந்து 530 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: சூடானில் இருந்து 530 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.சூடான் நாட்டில் அந்த நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கும் இடையேயான சண்டை நடக்கிறது. அங்கு உள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை வெளியேற்றுவதற்காக ஆபரேஷன் காவேரி மீட்புப் பணியை ஒன்றிய அரசு செய்து வருகிறது. சூடானில் இருந்து நேற்று முன்தினம் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் முதல் கட்டமாக 278 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதன் பின் இந்திய விமான படை 2 விமானங்களில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு இந்தியர்கள் கொண்டு வரப்பட்டனர். சூடானில் இருந்து மொத்தம் 530 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பதிவில் , ஜெட்டாவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை கண்காணிக்க வெளியுற இணை அமைச்சர் முரளிதரன் ஜெட்டா சென்று உள்ளார் என்றார்.

The post சூடானில் இருந்து 530 இந்தியர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,Sudan ,New Delhi ,Dinakaran ,
× RELATED இதை எல்லாம் மோடி பேச மாட்டார் 70 கோடி...