×

லெய்லாவை வீழ்த்தினார்: 15 வயது ஆண்ட்ரீவா

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், கனடா நட்சத்திரம் லெய்லா பெர்னாண்டஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவுடன் (15வயது, 194வது ரேங்க்) மோதிய லெய்லா (20 வயது, 28வது ரேங்க்) 3-6, 4-6 என்ற நேர் செட்களில் தோற்றார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதுவரை ஐடிஎப் தொடர்களில் விளையாடி வந்த ஆண்ட்ரீவா முதல் முறையாக டபுள்யூடிஏ போட்டியில் சிறப்பு அனுமதியுடன் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post லெய்லாவை வீழ்த்தினார்: 15 வயது ஆண்ட்ரீவா appeared first on Dinakaran.

Tags : Leila ,Andreeva ,Madrid ,Madrid Open ,Spain, ,Leila Fernandez ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா