×

அயர்லாந்துக்கு இலங்கை பதிலடி

 

காலே: அயர்லாந்து அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணியும் முதல் இன்னிங்சில் அபாரமாக ரன் குவித்து பதிலடி கொடுத்து வருகிறது. காலே சர்வதேச ஸ்டேடியத்தி நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து முதல் இன்னிங்சில் 492 ரன் குவித்து ஆட்டமிழந்தது.
கர்டிஸ் 111, ஸ்டர்லிங் 103, கேப்டன் பால்பிர்னி 95, டக்கர் 80 ரன் விளாசினர். இலங்கை பந்துவீச்சில் பிரபாத் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அடுத்து களமிறங்கிய இலங்கை 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 81 ரன் எடுத்திருந்தது. மதுஷ்கா 41, கேப்டன் கருணரத்னே 39 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 48.4 ஓவரில் 228 ரன் சேர்த்தது.

கருணரத்னே 115 ரன் (133 பந்து, 15 பவுண்டரி) விளாசி கேம்பர் பந்துவீச்சில் ஹம்ப்ரிஸ் வசம் பிடிபட்டார். 3ம் நாள் முடிவில் இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 357 ரன் குவித்துள்ளது (77 ஓவர்). மதுஷ்கா 149 ரன், குசால் மெண்டிஸ் 83 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை கை வசம் 9 விக்கெட் இருக்க, இன்னும் 135 ரன் மட்டுமே பின்தங்கியுள்ள நிலையில் 4ம் நாளான இன்று அந்த அணி பெரிய ஸ்கோர் அடித்து அயர்லாந்துக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post அயர்லாந்துக்கு இலங்கை பதிலடி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ireland ,Galle ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்