×

சில்லி பாய்ண்ட்

 

* நீச்சல் பயிற்சி முகாம்

எஸ்டிஏடி சார்பில் சென்னை, வேளச்சேரி நீச்சல் வளாகத்தில் 3 கோடைக்கால பயிற்சி முகாம் (தலா 12 நாட்கள்) நடைபெற உள்ளன. கட்டணம் ரூ. 2360. மேலும் தகவல் அறிய… வேளச்சேரி நீச்சல் வளாக அலுவலர்: 044-22354381, 74017 03473. இந்த முகாம்களில் சிறப்பாக திறனை வெளிப்படுத்தும் யு-15 சிறுவர், சிறுமிகளை போட்டிகளுக்கு தயார்படுத்தும் திட்டமும் உள்ளது.

* கிக் பாக்சிங் பயிற்சி

மகாராஷ்டிரா மாநிலம் பஞ்ச்கனியில் நாடு முழுவதுமுள்ள கிக்பாக்சிங் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் பங்கேற்ற தேசிய பயிற்சி முகாம் நடைபெற்றது. மொத்தம் 10 நாட்கள் நடந்த இந்த முகாமில் இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சர்வதேச பயிற்சியாளர்கள் பங்கேற்று ஆலோசனைகள், பயிற்சி அளித்தனர். தமிழ்நாடு மாநில கிக் பாக்சிங் சங்க பொதுச் செயலாளர் சி.சுரேஷ்பாபு தலைமையில் 15 வீராங்கனைகள், 35 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

* சிந்து, கிடாம்பி முன்னேற்றம்

துபாயில் நேற்று தொடங்கிய ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்தியாவிப் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் த்ரீஸா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இணை முன்னேறி உள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்‌ஷியா சென் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

* ஆலோசகராக கேன்

காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் கேன் வில்லியம்சன், இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை போட்டித் தொடரின்போது நியூசிலாந்து அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post சில்லி பாய்ண்ட் appeared first on Dinakaran.

Tags : Silly Point ,Camp ,Velachery Swimming Complex, Chennai ,STAD ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…