×

தேனிக்காரரின் மாநாட்டை கைவிட்ட தென்மாவட்ட கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டெல்லியை குளிர வைக்க தேனிக்காரர் எடுத்த முயற்சி என்னாச்சு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மலைக்கோட்டை நகரத்தில் தேனிக்காரர் நடத்திய மாநாட்டிற்கு, வடமாநில நதி பெயரிலான மாவட்டத்தில் அவரது அணியினர் சார்பில், பல வேன்களில் ஆட்களை அழைத்து வர ஏற்பாடு செய்தாங்க. அழைத்து வரும் நபர்களுக்கு ஒரு பெரிய கரன்சி கட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு பெரிய நோட்டு என்று கணக்கிட்டு, ஒரு கணிசமான தொகை அவரது அணியை சேர்ந்த முக்கிய பிரமுகரிடம் வழங்கப்பட்டதாம். ஆனால், மாநாட்டில் விரல் விட்டு எண்ணிடும் வகையில்தான் தலைகளே தெரிந்ததாம்.

கரன்சி போன அளவுக்கு கூட தொண்டர்கள் வரவில்லையாம். ஆனால், கணக்கு காட்டியதில் வந்த கட்சியினரை விட வேன்கள், கார்கள், பஸ்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. அந்த கணக்கை காட்டி கரன்சிகளை தேனிக்காரரிடம் இருந்து ஒரு குரூப் கறந்துவிட்டதாம். இலை கட்சியினர் சொன்னதுபோல வாகனங்களின் எண்ணிக்கை கணக்கு காட்டியதற்கு பாதிக்கும் குறைவாம். இதில் காமெடியே நடப்பது தேனிக்காரர் மாநாடு… கணக்கு கரன்சியை உருவிக் கொண்டு சென்றது சேலம்தரப்பு ஆட்கள் என்ற தகவல் தீ போல பரவி வருகிறதாம். இது அறிந்த சேலத்துக்காரர் தரப்பு முக்கிய பிரமுகர்கள், ‘நீங்கள் தேனிக்காரர் மாநாட்டில் கலந்து கொண்டீர்களா.. உங்கள் பெயர் அடிபடுதே…’ என்று கேள்வி கேட்டு துளைச்சிட்டாங்களாம்.

அதற்கு அவர்கள், ‘நாங்கள் ஏன் போகப்போகிறோம். எங்க பெயரை பொய்யாக பணம் வசூலிக்கும் பட்டியலில் சேர்த்து எங்க பணத்தை ஆட்டை போட்டிருக்காங்க. எல்லாம் தேனிக்காரரிடம் இருந்து கரன்சியை கறப்பது கஷ்டம் என்பதால் இப்படி சாக்கு சொல்லி பணம் வாங்கினாங்களாம். தென்மாவட்டங்களில் இருந்துதான் நிறைய பேர் வருவார்கள் என எதிர்பார்த்த தேனிக்காரருக்கு சொந்த மாவட்டமும், மத்த மாவட்டமும் கரன்சிக்கு ஆசைப்பட்டு அணி மாறிவராமல் வீட்டில் உட்கார்ந்து திருச்சி கதையை செல்போன் மூலம் கேட்டு சிரித்து கொண்டிருந்தார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மனம் தளர்ந்து உட்கார்ந்து இருப்பவரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியில் தேனிக்காரரின் அணி சார்பில் தமிழகத்தின் மையப்பகுதியான மலைக்கோட்டை மாநகரில் நேற்றுமுன்தினம் தேனிக்காரர் சார்பில் மாநாடு நடந்தது. சேலத்துக்காரருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த மாநாட்ைட பிரமாண்டமாக நடத்த வேண்டும். டெல்டா மாவட்டம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் இருந்து ‘வைட்டமின் ப’ கொடுத்தாவது தொண்டர்களை அழைத்து வரவேண்டும் என அந்தந்த மாவட்ட செயலாளருக்கு தேனிக்காரர் அதிரடியாக உத்தரவு போட்டு இருந்தாராம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அந்தந்த மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் தொண்டர்களை அழைத்து வருவதற்கான முயற்சியில் தேனிக்காரரின் டீம் களத்தில் இருந்தார்களாம்.

டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் இருந்து குறைந்த அளவிலான தொண்டர்கள் தான் மலைக்கோட்டை மாநாட்டுக்கு வந்து இருந்தார்களாம். குறைவான ஆட்களை கொண்டு வந்ததால், ஆதரவு மாவட்ட செயலாளர் மீது தேனிக்காரர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறாராம்… இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்பெற்றவர்களுக்கு ‘வைட்டமின் ப’, குவாட்டர், பிரியாணி, குஸ்கா வழங்கப்பட்டதாம்… ஆசையாக தின்றவர்கள் பிறகு வயிற்று வலியால் அவதிப்பட்டு தேனிக்காரரை திட்டியபடி போனாங்களாம்… நிகழ்ச்சி வெற்றி… நோக்கம் தோல்வியில் முடிந்ததாக தேனிக்காரரின் ஆதரவாளர்களே புலம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கர்நாடகா விஷயத்துல அழுது கொண்ேட சிரிக்கிறார்களாமே இலை நிர்வாகிகளை பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி சார்பாக கர்நாடகா தேர்தலில் தேனியும், சேலமும் போட்டி போட்டுக் கொண்டு ஆட்களை தேர்தலில் போட்டியிட நிறுத்தினாங்க. ஆனால், தேனி, சேலம் தரப்புக்கு டெல்லியில் இருந்து எச்சரிக்கை வேறு வடிவில் வந்ததாம். அதை கேட்டதும், தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இரண்டு பேருமே, வேட்பாளரை வாபஸ் வாங்கிக்கிட்டு பின்னங்கால் பிடறியிலடிக்க வாபஸ் வாங்கிட்டாங்க. இதனால இலைக்கட்சியின் இந்த இரண்டு தலைவர்களின் வீரத்தை நேரடியாக பார்த்த இலை கட்சியின் தொண்டர்கள், அதிர்ச்சி அடைவதற்கு பதிலாக உள்ளுக்குள்ளேயே சிரிச்சாங்களாம்.

அப்புறம், எங்களை நிற்கவிடாமல் தடுத்த தாமரை கட்சியோட இனி ஒட்டும் கிடையாது உறவும் கிடையாதுன்னு மம்மியும் தன் பங்குக்கு சபதம் போட்டிருப்பதாக கேள்வி. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சியை தேர்தலிலேயே நிற்கவே விடாம செஞ்சிட்டாங்களே’’ன்னு சேலத்தை சேர்ந்த இலை கட்சி தொண்டர்கள் புலம்பறாங்களாம். ஆனால் சோகத்துலேயும் ஒரு சந்தோஷம் இருக்குனு சொல்லி சிரிக்கிறாங்களாம். அது என்ன சந்ேதாஷம்னா, தேர்தல் நடக்கும் மாநிலத்துல இலைக்கட்சி செல்வாக்கோட இருக்குன்னு நினைச்சிக்கிட்டிருக்காங்களாம். ஆனால் கூட்டி கழிச்சி பார்த்தா ரெண்டாயிரம் ஓட்டுகூட இலைக்கு கிடைக்காதாம். இதுல எஜமான் ஜெயிச்சாரா, இல்ல சேலத்துக்காரரின் ராஜதந்திரம் ஜெயிச்சதான்னு, அவரோட அடிப்பொடிகள் காலரை தூக்கிவிடுறாங்களாம். அதாவது மிரட்டி பின்வாங்கி ஜெயிக்கிற அளவுக்கு இலைக்கு, அந்த மாநிலத்துல செல்வாக்கு இல்லை என்பதுதான் அவர்களின் எண்ணம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறைக்குள், காக்கிளுடன் கூட்டு சேர்ந்து தனி ராஜ்ஜியம் நடத்துவது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் சென்டரல் ஜெயில்ல உளவுத்துறை காவலராக காதல் என்ற வார்த்தையை மலையாளம் மொழியில மாற்றினால் வரும் பெயரை கொண்டவரு பணியாற்றி வர்றாரு. இவரு நேர்காணல் பணியில் இருந்தப்பவே, சிறைவாசிகளோட சொந்தக்காரங்க கொண்டு வர்ற பொருட்களை எடுத்துக்குவாராம். இவருக்கு அங்க பெயர்ல பட்டு வெச்சிருக்குறவரும், பெயரின் முடிவுல குமாரை கொண்ட 2 காக்கிகளோட சேர்ந்துகிட்டு ஆடாத ஆட்டம் போட்டு வர்றாராம். பட்டு பெயர்காரர் கடந்த வருஷம் இறந்த காவலருக்கு உதவி செய்வதாக கூறி வசூலித்த பணத்தை கொடுக்காமல், இதுவரையிலும் பணிக்கு வரலையாம்.

அதோட சிறையில் ரேஷன் பிரிவுல இருக்குற குமாரானவர் காதல் பெயரை கொண்ட உளவுகாக்கிக்கு கொடுக்க வேண்டியத கொடுக்குறாராம். இது தெரிஞ்சதால, சிறை அதிகாரி, அவரை ரேஷன் பிரிவுல இருந்து நீக்கிட்டாராம். உளவு காக்கி உதவியோட, திரும்பவும் அதே பிரிவுக்கு வந்துட்டாராம். இவங்க உண்மை முகம் தெரியாம மேலிடம் நம்பி பொறுப்பு ஒப்படைச்சிருக்காங்களேன்னு சிறை காக்கிகள் புலம்பித்தீர்க்குறாங்க. உளவுக்காக்கியை மாற்றி, புதியதாக ேநர்மையான காக்கியை நியமிச்சாத்தான் சிறை நேர்மையாக இருக்கும்னு சிறை வட்டாரத்துல இருந்தே குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்குது என்றார் விக்கியானந்தா.

The post தேனிக்காரரின் மாநாட்டை கைவிட்ட தென்மாவட்ட கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : South district ,Thenikar ,Delhi ,Uncle ,Peter ,
× RELATED பல்வேறு நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணி தீவிரம்