×

ரூ.2.50 லட்சத்துக்கு மலை ரயிலை வாடகைக்கு எடுத்த மாணவர்கள்

குன்னூர்: நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஊட்டி மலை ரயில் முக்கிய இடம்பெறுகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை 46.5 கிலோ மீட்டர் தூரம் மலை ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரயிலில்தான் பல்சக்கர தண்டவாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ரயிலுக்கு யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய அந்தஸ்து வழங்கியுள்ளது. இந்நிலையில் கோவை, மேட்டுப்பாளையம் தனியார் பள்ளியை சேர்ந்த 160 பேர் கொண்ட குழுவினர் 2.50 லட்ச ரூபாய் வாடகை கட்டணம் செலுத்தி மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை மலை ரயிலில் பயணம் செய்தனர். மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு அவர்கள் குன்னூர் வந்தடைந்தனர். வரும் வழியில் ஆங்காங்கே புகைப்படங்கள் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

The post ரூ.2.50 லட்சத்துக்கு மலை ரயிலை வாடகைக்கு எடுத்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty Hill ,Railway ,Nilgiri district ,Mettupalayam ,Ooty… ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் பனியின் தாக்கம் குறைந்தது கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றம்