×

தேர்தல் பிரசாரத்திற்கு இடையே ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா காந்தி

மைசூரு: மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தேசிய பொது செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்று காலை சிருங்கேரி செல்லும் முன், மைசூரு அக்ரஹாராவில் உள்ள ஓட்டலில் மசாலா தோசை, இட்லி சாப்பிட்டார். அவருடன், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார், கர்நாடக பொறுப்பாளர் சுர்ஜேவாலா ஆகியோரும் சாப்பிட்டனர். இட்லி மற்றும் தோசை சாப்பிட்ட பிறகு, பிரியங்கா காந்தி, தோசை தயாரிக்கும் வித்தைகளைக் கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதற்கு உணவக உரிமையாளர் உடனடியாக ஒப்புக்கொண்டு அவரை சமையலறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு பிரியங்கா காந்தி தோசை மாவு எடுத்து கல்லில் ஊற்றினார். இதற்கு சமையல் உதவியாளரும் உதவினார். அப்போது சில தோசைகள் கருகி போயின. இதனால் மீண்டும் ஒரே ஒரு தோசையை சரியான பதத்தில் சுட்டு பிரியங்கா மகிழ்ந்தார். பின்னர், உணவக உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா காந்தி, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். பின்னர், இட்லியும் தோசையும் நன்றாக இருப்பதாக பாராட்டினார். மீண்டும் எனது மகளுடன் ஒருமுறை வருகிறேன் என்று அவர்களிடம் கூறி விடைபெற்றார்.

The post தேர்தல் பிரசாரத்திற்கு இடையே ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Mysuru ,Congress ,National General Secretary ,Samrajnagar district ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்தை பாஜ...