×

ஒரு நிர்வாகம் எப்படி நடைபெறக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளே எடுத்துக்காட்டு: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் மெகா ஊழல்கள் நடைபெற்றதாக சிஏஜி அறிக்கையின் அடிப்படையில், அமைச்சர் அன்பில் மகேஸ் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுக ஆட்சியில் வீடுகளை முறையாக ஒதுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அதிமுக ஆட்சியில் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதிமுக ஆட்சியின்போது 3% மாணவர்கள், அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர். புத்தகப்பையில் இருந்த படத்தை மாற்ற ரூ.13 கோடி செலவாகும் என்பதால் அதை மாற்ற வேண்டாம் என்று கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான 60% வீடுகள் கட்டப்படவில்லை என்று சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 2016-2021 அதிமுக ஆட்சியில் வீடுகள் கட்டப்பட்டதில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை விட குறைவான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 5.09 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் தரப்பட்ட நிலையில் 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டது.

அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான 60% வீடுகள் கட்டப்படவில்லை. அதிமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடந்துள்ளது சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. தேவையற்ற செலவுகளையே அதிமுக அரசு செய்துள்ளதை சி.ஏ.ஜி. அறிக்கை தெளிவாக காட்டியுள்ளது. ஒரு நிர்வாகம் எப்படி நடைபெறக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளே எடுத்துக்காட்டு எனவும் கூறினார்.

The post ஒரு நிர்வாகம் எப்படி நடைபெறக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளே எடுத்துக்காட்டு: அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : minister love maze ,Chennai ,CAG ,Edappadi Palanisamy ,Minister Love Mahez ,Minister ,Love Maze ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...