×

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்: கேகேஆரை பழிதீர்க்கும் முனைப்பில் ஆர்சிபி

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 36வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதுகின்றன.

பெங்களூரு 7 போட்டியில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் டூபிளசிஸ் 405 ரன் எடுத்து டாப்பில் உள்ளார். விலா பகுதியில் காயத்தால் இன்றும் அவர் இம்பாக்ட் வீரராக தான் ஆட உள்ளார். விராட்கோஹ்லி 279 , மேக்ஸ்வெல் 253 ரன் எடுத்துள்ளனர்.

பேட்டிங்கில் இந்த 3 பேரை மட்டுமே நம்பி அணி உள்ளது. பந்துவீச்சில் முகமதுசிராஜ் பவர்பிளேவில் விக்கெட்டை வேட்டை நடத்தி வருகிறார். அவர் 13 விக்கெட் எடுத்துள்ளார். ஹர்ஷல் பட்டேல் 10 விக்கெட் எடுத்திருக்கிறார். கடைசி 2 போட்டியிலும் (பஞ்சாப், ராஜஸ்தான்) வென்ற நிலையில் இன்று ஹாட்ரிக் வெற்றிமுனைப்பில் களம் காண்கிறது.

மறுபுறம் ரானா தலைமையிலான கொல்கத்தா 7 போட்டியில், 2 வெற்றி, 5 தோல்வியுடன் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறது. கடைசி 4 போட்டியிலும் தோல்வியை சந்தித்ததால் இன்று வெற்றிபாதைக்கு திரும்பவேண்டிய நெருக்கடியில் உள்ளது. பேட்டிங்கில் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

ரிங்கு சிங் 233, வெங்கடேஷ் அய்யர் 254 ரன் எடுத்துள்ளனர். மற்ற யாரும் 150 ரன்னை தாண்டவில்லை. ரஸ்சல் பேட்டிங் புஸ்வானமாக உள்ளது. பந்துவீச்சும் பெரும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த சீனில் இரு அணிகளும் ஈடன்கார்டன் மைதானத்தில் ஏற்கனவே மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 81 ரன் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இன்று சொந்த மண்ணில் பழிதீர்க்க ஆர்சிபி போராடும். இரு அணிகளும் ஒட்டுமொத்தமாக 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 17ல் கொல்கல்தாவும், 14ல் பெங்களூருவும் வென்றுள்ளன.

The post ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்: கேகேஆரை பழிதீர்க்கும் முனைப்பில் ஆர்சிபி appeared first on Dinakaran.

Tags : Royal Challengers ,Bangalore ,Kolkata Knight Riders ,RCB ,KKR ,Bengaluru ,Bengaluru Chinnaswamy Stadium ,IPL ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவுடன் இன்று மோதல்: நெருக்கடியில் ஆர்சிபி