×

சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார் உள்பட 11 பேர் உயிரிழப்பு: முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல்..!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் தன்டேவாடா என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது காவல் வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்டர் என்ற இடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார், ஒரு ஓட்டுனர் உயிரிழந்தனர். மாவோயிஸ்ட் நிகழ்த்திய தாக்குதலில் 10 போலீசாரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார். நக்சல்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்; வீரர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

The post சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 போலீசார் உள்பட 11 பேர் உயிரிழப்பு: முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல்..! appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,CM ,Bhupesh Bagal ,Raipur ,Bastar ,Chhattisgarh Thandewada ,Chief Minister ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் அருகே துப்பாக்கி வெடிமருந்து ஆலை விபத்தில் ஒருவர் பலி..!!