×

கர்நாடக பேரவை தேர்தல் களத்தில் விறுவிறுப்பு: தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி நகர் தொகுதியில் அடிப்படை வசதிகள் மோசம்.. விளிம்பு நிலை மக்கள் வேதனை..!!

பெங்களூரு: தமிழர்கள் அதிகம் வசிக்கும் கர்நாடகாவின் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2008ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புலிகேசி நகர் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களின் பெரும்பான்மையாக தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளனர். விளிம்புநிலை மக்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி நகரில் குடிநீர், சுகாதாரம், கழிப்பிடம், சாலை மேம்பாடு உட்பட அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் புகார் தெரிவிக்கிறார்கள். இவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புலிகேசி நகரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி ஆன நிலையில், ஈபிஎஸ் ஆதரவு அதிமுக வேட்பாளர் அன்பரசனும் வேட்புமனுவை திரும்பப்பெற்றார். தற்போது காங்கிரஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ், பிஜேபி சார்பில் முரளி, மீண்டும் வாய்ப்பு வழங்காததால் பகுஜன் சமாஜ் சார்பில் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக கள நிலவரம் தெரிவிக்கிறது. இவர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் தமிழர்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தேர்தல் பரப்புரையிலும் அனல் பறக்கிறது.

The post கர்நாடக பேரவை தேர்தல் களத்தில் விறுவிறுப்பு: தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி நகர் தொகுதியில் அடிப்படை வசதிகள் மோசம்.. விளிம்பு நிலை மக்கள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Pulikesi Nagar ,Tamils ,Bengaluru ,Congress ,BJP ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு...