×

450 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாமுக்கோயா காலமானார்

திருவனந்தபுரம்: 450 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் மாமுக்கோயா (76 வயது) காலமானார். மலையாள சினிமாவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் மாமு கோயா. நாடக நடிகராக இருந்து கடந்த 1979ல் அன்யருடே பூமி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, பெருமழக்காலம், வடக்கு நோக்கி எந்திரம், பட்டனப்பிரவேசம், மழவில்காவடி உள்பட 450க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் காளிகாவு என்ற இடத்தில் ஒரு கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்றார். அப்போது திடீரென மாமு கோயாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. கீழே சாய்ந்தார். உடனே அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதித்தபோது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரபல நடிகர் மாமுக்கோயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post 450 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் மாமுக்கோயா காலமானார் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Mammukoya ,Mamukkoya ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...