×

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் ஆகியவை களைகட்டும். அதேபோல விடுமுறை நாட்களிலும் உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை அதிகளவில் காணலாம். தற்போது கோடை விடுமுறை காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இப்படி குடும்பமாக வரும் சுற்றுலா பயணிகள், காலையில் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு களித்தனர்.

தொடர்ந்து கடல் அலையில் கால்களை நனைத்தும், கடற்கரையில் உற்சாகமாக விளையாடியும், குளித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதேபோல் கடற்கரையில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயின்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.

The post கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Sabarimala ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!