×

கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் விரிவான கொள்கையை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவை எதிர்த்து 7 மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மனுவில், கலாஷேத்ராவுக்கு எதிராக தாங்கள் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது.

அதேநேரத்தில் மாநில மகளிர் ஆணையம் விசாரணை செய்த விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும், உள் விசாரணை குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு இன்று விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நீதிபதி தண்டபாணி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கொள்கைகளை வகுத்த பிறகு அமைக்கப்படும் உள் விசாரணை குழுவில் பெற்றோர், மாணவியர் பிரதிநிதிகளை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை போலீசாரும், நீதிபதி கண்ணன் குழுவும் தொடர்ந்து விசாரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து உள் விசாரணை குழுவை மாற்றியமைக்கக் கோரி 7 மாணவிகள் தொடர்ந்த வழக்கு ஜூன் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post கலாஷேத்ரா அறக்கட்டளை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் விரிவான கொள்கையை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kalashetra Trusts ,Chennai ,Kalashetra Trust ,Kalashetra Foundation ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...