×

இந்திய அணுசக்தி கழக ஆலையில் 325 இடங்கள் :பி.இ., படித்தவர்களுக்கு வாய்ப்பு

பாட வாரியாக காலியிடங்கள் விவரம்:
அ. Mechanical: 123 இடங்கள் (பொது-48, பொருளாதார பிற்பட்டோர்-12, எஸ்சி-18, எஸ்டி-9, ஒபிசி-36).
ஆ. Chemical: 50 இடங்கள் (பொது-19, பொருளாதார பிற்பட்டோர்- 5, எஸ்சி-8, எஸ்டி-4, ஒபிசி-14)
இ. Electrical: 57 இடங்கள் (பொது-22, பொருளாதார பிற்பட்டோர்-6, எஸ்சி-9, எஸ்டி-4, ஒபிசி-16.)
ஈ. Electronics: 25 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-4, எஸ்டி-2, ஒபிசி-7)
உ. Instrumentations: 25 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, எஸ்சி-4, எஸ்டி-2, ஒபிசி-7).
ஊ. Civil: 45 இடங்கள் (பொது-18, பொருளாதார பிற்பட்டோர்-4, எஸ்சி-7, எஸ்டி-3, ஒபிசி-13).

வயது: 28.4.2023 தேதிப்படி 26க்குள். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி., பட்டம். 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில்
நடந்த கேட் நுழைவுத் தேர்வுகள் ஏதாவது ஒன்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் மூலம் பணி வழங்கப்படும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.35 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். பின்னர் நிரந்தரப் பணி வழங்கப்படும்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் கட்டணம் செலுத்தவும். இதை எஸ்பிஐ வங்கியின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. www.npcilcareers.co.in என்ற இணையத ளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.4.2023

The post இந்திய அணுசக்தி கழக ஆலையில் 325 இடங்கள் :பி.இ., படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Atomic Institute Plant ,Indian Atomic Institute ,
× RELATED சொல்லிட்டாங்க…