×

விம்பிள்டனில் ரஷ்யா, பெலாரஸ் கொடிகளுக்கு தடை: உக்ரைன் மீதான போர் காரணமாக ஆல் இங்கிலாந்து கிளப் நடவடிக்கை..!!

விம்பிள்டன்: நடப்பாண்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கலந்துக்கொள்ள ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு கொடிகளுக்கு ஆல் இங்கிலாந்து கிளப் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவுக்கும், அதன் நட்பு நாடான பெலாரஸுக்கும் பல விளையாட்டு சம்மேளங்கள் தடை விதித்துள்ளன. கிரான்ஸ் லாம் போட்டிகளில் முதன்மையான விம்பிள்டனில் பங்கேற்க இவ்விரு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு கடந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் டேனல் மெத்வதேவ், அசரன்கா உள்ளிட்டோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வரும் ஜூலையில் தொடங்கும் விம்பிள்டனில் அவ்விரு நாட்டினரும் நிபந்தனையுடன் கலந்துக்கொள்ள கடந்த மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. எந்த நாட்டையும் சாராத நடுநிலையாளராக பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் விம்பிள்டனில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டு கொடிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக ஆல் இங்கிலாந்து கிளப் தெரிவித்துள்ளது. கொடி சம்பந்தமாக ஆஸ்திரேலிய ஒபெனில் பிரச்சனைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post விம்பிள்டனில் ரஷ்யா, பெலாரஸ் கொடிகளுக்கு தடை: உக்ரைன் மீதான போர் காரணமாக ஆல் இங்கிலாந்து கிளப் நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Belarus ,Wimbledon ,England ,Ukraine ,Dinakaran ,
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...