×

பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாப்பு அணிவகுப்பில் ஓடி செல்லும் போலீசார்: ஆற்றல் வீணடிக்கப்படுவதாக இங்கிலாந்து மக்கள் அதிருப்தி..!!

இங்கிலாந்து: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாப்பு அணிவகுப்பில் ஏராளமான போலீசார் ஓடி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், போலீசாரின் ஆற்றல் வீணடிக்கப்படுவதாக அந்நாட்டு மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இருந்து தனது இல்லத்துக்கு திரும்பிய பிரதமர் ரிஷி சுனக்கின் கான்வாய்க்கு முன்பாக முதலில் சைக்கிள்களிலும், பின்னால் இருசக்கர வாகனங்களிலும் போலீசார் அணிவகுத்து சென்று வழியை விலக்கி விட்டனர். அவர்களுக்கு பின்னால் 4 ரேஜ் ரோவர் கார்களை கொண்ட கான்வாயில் ரிஷி சுனக் சென்றார்.

இந்த அணிவகுப்பில் போலீசார் பலரும் ஓடி வந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் ரிஷி சுனக்கின் பாதுகாப்புக்கு போலீசாரின் ஆற்றல் வீணடிக்கப்படுவதாக இங்கிலாந்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் லண்டனின் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தான் பிரதமருக்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவரது அலுவலக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

The post பிரதமர் ரிஷி சுனக்கின் பாதுகாப்பு அணிவகுப்பில் ஓடி செல்லும் போலீசார்: ஆற்றல் வீணடிக்கப்படுவதாக இங்கிலாந்து மக்கள் அதிருப்தி..!! appeared first on Dinakaran.

Tags : PM ,Rishi Sunak ,security march ,UK ,security ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!