×

பழநி அருகே கோயில் திருவிழாவில் 300 கிடா வெட்டி ‘கமகம’ கறி விருந்து

பழநி அருகே நடந்த கோயில் திருவிழாவில் 300 கிடாக்கள் வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே கோம்பைபட்டியில் பெரியதுரை, கருப்பண்ண சுவாமி, செல்வ விநாயகர், தன்னாசியப்பன், பொலக்கருப்பு கோயில் உள்ளது.

இக்கோயிலில் நேற்று 42வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி குதிரை உருவாரம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோயிலை அடையும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அசைவ அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இதற்காக 300க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டப்பட்டன. கிடாவெட்டு விருந்தில் கணக்கன்பட்டி, ஆயக்குடி, ராமபட்டிணம்புதூர், மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்காக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

The post பழநி அருகே கோயில் திருவிழாவில் 300 கிடா வெட்டி ‘கமகம’ கறி விருந்து appeared first on Dinakaran.

Tags : Palani ,300 ,Kamagama' ,
× RELATED 10 ஆயிரம் பக்தர்களுக்கு 500 கிடாய், 300 கோழிகளை பலியிட்டு கமகம கறி விருந்து