×

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்திற்காக சாலை மார்கமாக சென்று கொண்டிருக்கும் முதலமைச்சர், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மறுவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக 1971ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த போது மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட முதியோர்கள், ஆதரவற்ற முதியோர்கள் பலர் உள்ளனர்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் முதலமைச்சர் உடன் உள்ளனர். அரசு மறுவாழ்வு இல்ல முதியவர்களிடம் குறைகளை கேட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக முதியவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தை புதுப்பித்து தரவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி மக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Baranur Government Rehabilitation Home ,Chengalpattu District ,Chengalpattu ,M.K.Stalin ,Leprosy Rehabilitation Center ,Paranur, Chengalpattu district ,Villupuram, Cuddalore ,Paranur Government Rehabilitation ,Home ,
× RELATED படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி...