×

ஸ்ரீ ராமானுஜர் உற்சவ விழா

 

சேலம், ஏப். 26:சேலம் எருமபாளையத்தில் ரூ.6 கோடி மதிப்பில் 85 அடி உயர ராஜகோபுரத்தில் 74 மடாதிபதிகளை குறிக்கும் வகையில் 74 தூண்கள் அமைக்கப்பட்டு  ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ஸ்ரீ பகவத் ராமானுஜர் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் தமிழ் மாதங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஸ்ரீ ராமானுஜரின் 1006வது நட்சத்திர உற்சவ வைபவம் நேற்று நடந்தது. காலையில் சுப்ரபாதம் கோபூஜை, விஸ்வரூப சவை உள்ளிட்டவைகள் மற்றும் திருவாராதனம் நடைபெற்றன.

தொடர்ந்து, ஸ்ரீ ராமானுஜர் உற்சவ மூர்த்திக்கு நவ கலச ஸ்தபன விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரமும், ராமானுஜர் நூற்றந்தாதி பாராயணமும் நடைபெற்றது. பின்னர், 18 அடி உயரத்தில் உள்ள ராமானுஜருக்கு சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் நடந்தது. இதையடுத்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. ராமானுஜரின் திரு நட்சத்திர உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post ஸ்ரீ ராமானுஜர் உற்சவ விழா appeared first on Dinakaran.

Tags : Sri Ramanujan Utsava Festival ,Salem ,Rajagopuram ,Salem Erumapalayam ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை