×

விசாரணை கைதி ஜி.ஹெச்.,ல் அனுமதி

 

சேலம், ஏப்.26: சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜி (எ) விஸ்வநாதன் (49). இவரை கடந்த 2021ம் ஆண்டு அம்மாபேட்டை போலீசார், கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர், சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த அவர், நேற்று முன்தினம் மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடந்து கொண்டார். இதனால், சிறை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கைதி விஜியை அனுமதித்தனர். அங்கு மனநல சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதி விஜி மீதான கொலை முயற்சி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளநிலையில், அவர் மனநலம் பாதித்தது போல் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. அதனால், மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கின்றனர்.

The post விசாரணை கைதி ஜி.ஹெச்.,ல் அனுமதி appeared first on Dinakaran.

Tags : GH ,Salem ,VG ,Viswanathan ,Ammapet ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை